• Fri. Mar 29th, 2024

மதுரை சித்திரை திருவிழாவின் ஏற்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்..

Byகாயத்ரி

Apr 12, 2022

உலக பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சி 14.04.2022ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மேல் 10.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இத்திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வரும் பக்தர்களுக்கு தெற்கு கோபுர வாசல் வழியாக இலவச அனுமதியும், மேற்கு கோபுர வாசல் வழியாக முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் அரசு நிர்வாக அதிகாரிகளும், ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டண சீட்டு பெற்றுள்ள பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாகவும் திருக்கோவிலுக்குள் செல்ல இந்து சமய அறநிலையத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திருக்கல்யாண நிகழச்சியை காண வருகை தரும் பக்தர்கள் 14.04.2022 ஆம் தேதி காலை 07.00 மணி முதல் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவு வாசல்களில் பரிசோதனைக்கு பின்பு திருக்கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர அனுமதி இல்லை.பக்தர்கள் மேற்கு மற்றும் வடக்கு ஆடி வீதிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் அமரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.திருக்கல்யாண நிகழச்சி முடிந்த பின்பு பக்தர்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வழியாக வெளியேற வேண்டும்.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள போதிலும், முற்றிலுமாக ஓயவில்லை என்பதால், பக்தர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பக்தர்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல்துறையின் சார்பில் முகக்கவசம் மற்றும் குடி தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் தாங்கள் அணிந்து வரும் நகைகளை பாதுகாப்புடன் அணிந்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காவல்துறை சார்பில் நகைகளை பாதுகாக்க safety pin வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சியினை காம வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு மஞ்சள் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் மேற்காவணி மூல வீதியிலும், பிங்க் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் தெற்கு ஆவணி மூல வீதியிலும், அனுமதி அட்டை இல்லாதவர்கள் தெற்கு மற்றும் வடக்கு மாசி வீதிகளில் வாகனங்களை நிறுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி 16.04.2022 ஆம் தேதி காலை 05.50 மணிக்கு மேல் 06.20 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்நிகழச்சிக்கு வரகை தரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு பச்சை நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் A.V. பாலத்திலும், பிங்க் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் மினி பஸ் ஸ்டாண்டிலும்
(Mini bus stand) , நீல நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் அண்ணா பேருந்து நிலையத்திலும், அனுமதி அட்டை இல்லாதவர்கள் கிழக்கு மற்றும் வடக்கு மாசி வீதிகள், குருவிகக்காரன் சாலை மற்றும் டாக்டர் தங்கராஜ் சாலையில் வாகனங்களை நிறுத்தும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மற்றும் ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழச்சிகளை காண வரும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க ட்ரோன் கேமராக்கள், சிசிடிவி கேமராக்கள், பைனாகுலர் பயன்பாடு கொண்ட கண்காணிப்பு டவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்ற செய்லகளில் ஈடுபடும் நபர்களை Face recognition software என்ற செல்போன் செயலி மூலம் கண்டறியும் வசதி பாதுகாப்பு அலுவலில் உள்ள அனைத்து காவல் ஆளிநர்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளது. சமீக விரோதிகள் மற்றும் குற்றவாளிகளை கண்டறிய Body worn camera பொருத்தியுள்ள ஆளிநர்களும், மேலும் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தனிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மொத்தம் 3500 காவல்துறையினர் மதுரை மாநகரத்திலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்கள் யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் திருக்கோவிலின் உள்ளே செயல்பட்டு வரும் காவல் கட்டுப்பாட்டு அறையை 83000-17920 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டும் மற்றும் மீனாட்சியம்மன் சிருக்கோவிலை சுற்றியும் நிறுவபட்டுள்ள May I Hep You Booth-களையோ கண்காணிப்பு டவர்களில் உள்ள காவல் ஆளிநர்களை அணிகியோ விபரம் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மதுரை மாநகராட்சியும், மதுரை மாநகர காவல்துறையும் இணைந்து “மாமதுரை” என்ற செவ்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூகுள் பிளே ஸ்டோரில் மேற்படி செயலியை பதிவிறக்கம் செய்து, அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழச்சி மற்றும் , ஸ்ரீ கள்ளழகர் சாமி சென்று கொண்டிருக்கும் இடத்தினை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *