உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி சி.வி.இராமன் மகளிர் விடுதியில் நிலா திருவிழா 07.03.23 செவ்வாய்க்கிழமை அன்ற மாலை சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள், மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
நிகழ்ச்சியின் முதல் தொடக்கமாக விடுதி காப்பாளர் முனைவர் அனிதா அனைவரையும் வரவேற்றார். இந்த மகளிர் தின நிலா திருவிழா நிகழ்ச்சியை தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தலைமை உரையில் உலகின் தலைசிறந்த பொருளாதார நாடாக இந்தியா முன்னேறி வருகிறது. சூரியன், நிலா, காற்று மற்றும் இயற்கை ஆகிய அனைத்துமே மனிதனுக்கு உதவியாக இருக்கிறது. அதேபோலவே மனிதனும் பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும். நிலவின் இயக்கம், நட்சத்திரத்தில் நிலவு பயணம் செய்யும் விதம் குறித்தும் எடுத்துரைத்தார். பெண்கள் கடின உழைப்பின் மூலம் சிறந்து விளங்குகிறார்கள். அனைத்து மாணவிகளும் பல்வேறு சிறந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறிந்து வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் முதலாக விளங்கிட வேண்டும் என்று வாழ்த்தி பேசினார்.
கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். அதில் நிலவில் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் தான் அனைவருக்கும் தெரியும். இரண்டாவதாக வருபவர்களை உலகம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை. ஆகவே அனைவரும் தங்கள் துறையில் முதன்மையாக சிறந்து வழங்க வேண்டும் என்று வாழ்த்தினார்.
மேலும் மகளிர் தின சிறப்பு பரிசாக விடுதியை குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக மேம்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர் பொன்பெரியசாமி, விண்வெளி பற்றிய பல அதிசய நிகழ்வுகளை இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு அதை தொலைநோக்கி வழியாக கண்டு களித்து அறிவியல் வளர்ச்சியை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார்.

இயற்பியல் துறை உதவி பேராசிரியர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம் வைத்து தமிழ் மாதங்கள் கணக்கிடப்படுகிறது என்றும், ஒவ்வொரு நாளும் நிலவானது 12 டிகிரி நகர்வதை வைத்து திதி கணக்கிடுகிறார்கள் என்றும், ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் நிலவு பயணம் செய்யும் போது அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயர் தமிழ் மாதமாக குறிக்கப்படுகிறது என்பதையும், நிலவின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் மாணவிகள் அதிநவீன தொலைநோக்கி மூலம் அழகிய நிலா, வியாழன் கோள் மற்றும் வியாழனின் நான்கு நிலாக்கள், வெள்ளிகோள், செவ்வாய் கோள், ஆகியவை நேரடியாக காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நான்கு நாட்களுக்கு 250 க்கு மேற்பட்ட மாணவிகள் முதல் முறையாக தொலைநோக்கி வழியாக நிலவு மற்றும் கோள்களை கண்டு களித்து வியப்படைந்தனர். இந்த நிகழ்ச்சியை என்எம்சி ஆஸ்ட்ரோ கிளிப் மாணவிகள் ஒருங்கிணைத்தனர்.

- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]
- சோழவந்தானில் குடிநீர் குழாய் வரிசெலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும்சோழவந்தானில் குடிநீர் குழாய் வரி செலுத்தாதவர்களின் இணைப்பு துண்டிக்கப்படும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளதுமதுரை மாவட்டம் […]
- தங்களது சொந்த ஊர்களில் பணியாற்றங்கள், தொழில் தொடங்குங்கள் -தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்புமதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் zohoநிறுவனத்தின் தலைவர் இந்திய தொழிலதிபர் ஸ்ரீதர்வேம்பு இந்தியர்கள் தொழில்நுட்பத்தை உருவாக்கி […]
- சிவகாசி குடிநீர் ஆதாரமான அணை பகுதியில், மேயர் தலைமையில் திடீர் ஆய்வுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் ஆதரமாக இருப்பது வெம்பக்கோட்டை அணை.கோடை காலம் துவங்கியுள்ள […]
- திரையரங்கில் நரிக்குறவர்களுக்கு அனுமதி மறுப்பு-மனித உரிமை ஆணையம் விசாரணைரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்த சம்பவம் […]
- சிவகாசி அருகே, முயல் வேட்டையில் ஈடுபட்ட 2 பேர் கைதுவிருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே யுள்ள வெம்பக்கோட்டை – வனலிங்கபுரம் பகுதியில் உள்ள காப்புக் காடுகளில், […]
- மதுரை தோடனேரியில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம்மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் அருகே உள்ள தோடநேரி கிராமத்தில் தமிழக அரசின் மக்களை […]
- கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியதுஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது.கடந்த 2019ம் ஆண்டு கொரோனா நோய் […]
- ராஜபாளையத்தில் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் 30 குடும்பங்களை […]
- எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை -நடிகர் விஜய்சேதுபதி பேட்டிமதுரையில் முதல்வர் ஸ்டாலின் 70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் […]
- திருப்பங்குன்றம் அருகே பட்டாகத்தியுடன் வந்து புல்லட் பைக் திருடிய திருடர்கள்திருப்பங்குன்றம்அருகே வலையபட்டியில் பட்டாகத்தியுடன் வந்து ராயல் என்ஃபீல்டு புல்லட் பைக்திருடிய திருடர்கள்..வீடியோ காட்சிகள் வெளியீடுமதுரை மாவட்டம் […]
- ‘மை டியர் டயானா’ இணையத் தொடர் படப்பிடிப்பு துவக்கம்பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு […]
- தமிழகத்தின் ஆட்சி அமைப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம்- சரத்குமார் பேட்டிதமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது தான் சமத்துவ மக்கள் கட்சியின் நோக்கம் அதற்காக கட்சி நிர்வாகத்தை தொடர்ந்து […]
- ராஜபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை குறைக்க […]
- பாலியல் தொல்லை பிரபல கல்லூரியில் தொடரும் போராட்டம்..!!மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாஷேத்ரா கல்வி நிறுவனத்தில் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் […]