• Sat. Nov 14th, 2026

முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடிதம்…

மைசூரில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற விழாவில், “மேகதாது அணையைக் கட்டுவதை எவராலும் தடுக்க முடியாது” எனக் கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் பேசியிருப்பது தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவிரி உரிமையில் கர்நாடக அரசியல் கட்சிகள் ஒற்றுமையாகச் செயல்படுவதைப் போல, தமிழ்நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் முதலமைச்சர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுடன் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் குழு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அதை வழங்க வேண்டும் – என்று முதல்வர் விஜய்க்கு திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.