தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுருளிப்பட்டியில், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில், 1.18 லட்சம் மதிப்பில், 100-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, துறை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:

முதல் முதலில் மக்கள் தொடர்பு முகாமை கொண்டு வந்தது, தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா, சுருளியை சுத்தம் செய்தார்.

சுருளியில் என்னுடைய பாராளுமன்ற ஃபண்டை (பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி வளர்ச்சி நிதி) வைத்து, பேருந்து நிலையத்தை தளம் உயர்த்தி, 30 கடைகள் தருவதற்காக, இரண்டு வருடமாக கோரிக்கை வைத்து வருகிறேன்.
ஆனால், அங்கு இருக்கக்கூடிய வனத்துறை, வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய நான்கு துறைகளும் ஒத்துழைத்தால் தான், அந்த திட்டத்தை கொண்டு வர முடியும்.
மாவட்ட ஆட்சித் தலைவர், இந்த நான்கு துறைகளையும் அழைத்து, ஆலோசனை செய்து, நல்ல முடிவு எடுத்தால், ஒரு கோடி அல்ல, இரண்டு கோடி கூட பாராளுமன்றத்தில் இருந்து நிதியை வாங்கித் தருகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், மக்கள் நீங்கள் வாக்களித்தீர்கள், நான் வெற்றி பெற்றேன். யாரும் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால், இங்கு இருக்கக்கூடிய கள்ளர் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து, மாணவர்கள் செல்வதற்கு சிரமமாக இருந்தது. ஆனால், சுமார் 40 லட்சம் மதிப்பில், அந்த சுற்றுச்சுவரை கட்டி, நிழல் குடைகள் கட்டி, இப்போது தனியார் பள்ளி போல் அதை செய்து கொடுத்திருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.