• Sat. Nov 14th, 2026

அதிகாலையில் கள்ளத்தனமாக விற்கப்படும் மது விற்பனையை தடுத்தாலே போதும்…

மதுரை சோழவந்தானில் தேங்காய் லோடு வேலைக்கு செல்லும் பெண் கூலி தொழிலாளி கண்ணீர் மல்க பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுரை மாவட்டம் சோழவந்தான் வாடிப்பட்டி பகுதிகளில் அதிகாலை முதல் கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் இதன் காரணமாக பல குடும்பங்கள் சீரழிவதாகவும் தேங்காய் லோடுக்கு செல்லும் பெண் கூலித் தொழிலாளி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

சோழவந்தான் பேரூராட்சி 16 வது வார்டு மேலபச்சேரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில் குடியால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது அதிகாலை ஐந்து மணிக்கு கள்ளத்தனமாக மதுவை விற்பனை செய்கிறார்கள் எனது கணவர் காலை 5 மணிக்கு எல்லாம் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்கிறார் எனது இரு மகள்களை வைத்து கடும் சிரமத்திற்கு இடையில் வாழ்ந்து வருகிறேன் தேங்காய் லோடு வேலை பார்க்கும் நான் தினசரி 700 ரூபாய் சம்பாதிக்கும் நிலையில் எனது கணவர் ஒழுங்காக வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார் தற்போது கள்ளத்தனமாக காலை 5 மணிக்கு எல்லாம் மது விற்கப்படுவதால் ஐந்து மணிக்கே குடித்துவிட்டு வந்து வேலைக்கு செல்லாமல் வீட்டில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருகிறார்

இதனால் குடும்பத்தின் நிம்மதியே போய்விட்டது எனது இரண்டு மகளும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல் மில்லில் வேலை பார்க்கும் இடத்தில் தங்கிக் கொள்கிறார்கள் மேலும் குடித்துவிட்டு வந்து கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவதும் அசிங்கமாக பேசுவதுமாக கணவர் உள்ளார்

வீட்டில் காய்கறி நறுக்கும் இடத்தில் வைக்கும் அருவா மனையை எடுத்தால் அந்த இடம் முழுவதும் காலி மது பாட்டில்களாக உள்ளது காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தால் கணவரை விட்டு பிரிந்து சென்று சிறிது காலம் இருக்கவும் என கூறுகிறார்கள் காவல்துறைக்கு தெரிந்தே மது விற்கப்படுகிறது எனக்கு ஒன்றும் பயமில்லை பக்கத்தில் உள்ள ஆர்சி பள்ளி அருகில் நாள் முழுவதும் கள்ளத்தனமாக மது விற்கிறார்கள்

மது குடிப்பவர்களின் வீட்டில் உள்ள பெண்கள் தாலி அறுக்க வேண்டும் மது விற்பவர்கள் வசதியாக நிம்மதியாக வாழ வேண்டும் என வேதனையுடன் கூறியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

12 மணிக்கு மேல் அரசாங்கம் மது கடையை திறந்து விற்கும் நிலையில் ஒரு மணி வரை வேலை பார்த்துவிட்டு அதற்கு பின்பு குடித்துவிட்டு வந்த கணவர் தற்போது கள்ளத்தனமாக அதிகாலையில் விற்கப்படும் மதுவை குடித்துவிட்டு வந்து வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருப்பவர்களையும் நிம்மதியாக இருக்க விடாமல் தொந்தரவு செய்கிறார்

விஜய் அரசு வந்தால் மதுவை ஒழித்து விடுவார்கள் என்று நினைத்தேன் ஆனால் தற்போது தான் அதிகமாக மது விற்கப்படுகிறது

மகளிர் உரிமை தொகை 1000 கூட எங்களுக்கு வேண்டாம் அதிகாலையில் விற்கப்படும் மது விற்பனையை தடுத்தாலே பல குடும்பங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று கண்ணீர் மல்க கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து உள்ள நிலையில் தற்போது இரண்டு பெண் குழந்தைகளுடன் நிம்மதியாக வாழ்ந்து வந்த குடும்பம் அதிகாலையில் கள்ளத்தனமாக விற்கப்படும் மது காரணமாக சீரழிந்து வருவது வேதனையை ஏற்படுத்துவதாக இந்த பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்

மேலும் அந்த பெண் கூறுவது போல் காவல்துறை அனுமதியுடன் அதிகாலையில் மது விற்கப்பட்டு வந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கள்ளத்தனமாக விற்கப்படும் மது விற்பனையை தடுத்து சீரழிந்து வரும் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.