• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீண்டும் தலைவரானார் மு.க.ஸ்டாலின்

ByA.Tamilselvan

Oct 9, 2022

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில்மொத்தம் 4 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர்.
தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடததால் திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வாகினார். அதே போல திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார். திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.