தன் செல்லமாக வளர்க்கும் நாய்களுக்காக பலரும் பலவற்றை செய்வார்கள். ஆனால் ஒரு தம்பதி தங்கள் ஆசையாக வளர்த்த நாய்க்காக வீடு ஒன்றை கட்டியிருக்கிறார்கள்.
தாங்கள் வளர்த்து வரும் கோல்டன் ரெட்ரீவர் வகை நாயை மிகவும் நேசிக்கும் இந்த தம்பதி அதற்காக 2 மாடி வீட்டை கட்டி பலரை வியப்பில் ஆழ்த்தி உள்ளனர். மேலும், அதற்கான தனி இடம், ஒரு டிவி செட் மற்றும் ஃபிரிட்ஜ் ஒன்றும் உள்ளது.
தங்கள் நாய்க்காக கட்டியுள்ள இந்த வீட்டைக் குறித்து அந்த தம்பதியினர் சமுகவலை தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

அந்த பதிவில், “எனது கணவர் வீட்டில் வளரும் எங்கள் நாய்க்கு டாக் ஹவுஸ் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இந்த வீட்டில் அதற்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. தனி டிவி, தனி படுக்கை, ஃபிரிட்ஜ், தனி சோஃபா மற்றும் பல இதில் அடங்கும்.
அதுமட்டுமின்றி ஃபிரிட்ஜில் அதற்கு தேவையான உணவுகள் நிறைய வைக்கப்பட்டுள்ளன. இங்கே எங்களது ஆசை நாய் நன்கு சொகுசாக வாழ்கிறது ” என தெரிவித்துள்ளார்.