கஷ்டப்படும் மாணவனின் படிப்புக்கு உதவிய மரனேரி காவல் துறையினர்.
மரனேரி, முனீஷ் நகரை சேர்ந்த காந்தி என்பவர் மகன் பாலமுருகன். தாயை இழந்து வயதான தந்தையுடன் வாழும் இவர், SMS பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில், காந்தியால் தனது மகனை படிக்கவைக்க போதிய பணம் இல்லாத காரணத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தது உள்ளார்.

இந்நிலையில், டிஜிபி அவர்களுக்கு தன் மகனின் படிப்பிற்கு உதவி செய்யுமாறும் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த மனுவைப் பெற்ற மரனேரி காவல் நிலையம் அவரது படிப்பிற்கு உதவ முன் வந்ததுள்ளது. மேலும் தலைவர் டி.கான்சாபுரம், மூர்த்தி, முருகன், குருசாமி ஆகியோர் மூலம் மரனேரி காவல் நிலையம் சார்பாக அவரது 2 வருட படிப்பு செலவு தொகையும் பொறுப்பு ஏற்று தற்போது 4th செமஸ்டருக்கான கட்டணம் 7500ரூபாய் கொடுத்து உதவியுள்ளனர்.