

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.
ரொமான்டிக் காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்துள்ளனர்.
நானும் ரெளடிதான் படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த படத்திலிருந்து ரெண்டு காதல், டூடூடூ, நான் பிழை என இதுவரை 3 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் மொலோடி பாடலாக உருவாகி உள்ள நான் பிழை பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். அனிருத் இசையில், ரவி மற்றும் சாஷா திருப்பதி குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்படும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்த நிலையில், மாலை 6 மணிக்கு “காத்து வாக்குல ரெண்டு காதல்” பட டீஸர் இன்று வெளியிடப்பட்டது! நயன்தாரா மற்றும் சமந்தா இருவரின் காதலை சமாளிக்கும் காதலனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி! பிரபு, கிங்ஸ்லி என கலகலப்பாக அமைந்துள்ளது பட டீஸர்!
மேலும், ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகும் எனவும் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார். டீஸரை தொடர்ந்து, பட ரிலீஸ் தேதி அறிவிப்பு குறித்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்!
