வேலூர் மாநகராட்சியில் 37-வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார்
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் இதுவரை 11 வார்டுகளில் திமுக முன்னிலை பெற்றுள்ளது. இதில் 37வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அவரை சக திருநங்கைகள் ஆரத் தழுவி மகிழ்ச்சியும் பாராட்டும் தெரிவித்தனர்.
ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர்!
பவானிசாகர் பேரூராட்சி 11வது வார்டில் ஒரே ஒரு ஓட்டு வாங்கிய பாஜக வேட்பாளர் நரேந்திரன்! பாஜக வேட்பாளரின் ஓட்டை தவிர அவரது குடும்பத்தினரோ, நண்பரோ கூட வாக்களிக்காததால் பெரும் ஏமாற்றம்!
மநீம வேட்பாளருக்கு ஒரு வாக்குக்கூட இல்லை!
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சிவகங்கை நகராட்சியில், 1வது வார்டில் மநீம வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறவில்லை
எடப்பாடியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்!
எடப்பாடி பழனிசாமி வசிக்கும் சேலம் நெடுஞ்சாலை நகர் 23வது வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி அறிவழகன் வெற்றி! அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வசிக்கும் வார்டிலேயே அதிமுக தோல்வி அடைந்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி!
ஹிஜாப்பை கழற்றச் சொன்ன மேலூர் நகராட்சியில் திமுக வெற்றி!
பாஜக முகவரால் ஹிஜாப்பை கழற்றச் சொன்ன மேலூர் நகராட்சி 8வது வார்டில், திமுக வேட்பாளர் யாசீன் அமோக வெற்றி! எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர் 125 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் 8 வாக்குகளையும் பெற்று டெபாசிட் இழந்தனர்!