• Wed. Jan 22nd, 2025

பாதுகாப்பைத் தருமா லிவிங் டு கேதர் வாழ்க்கை..?

இன்றைய காலக்கட்டத்தில் இதுவும் தவிர்க்க இயலாத மேற்க்கத்திய கலாச்சாரம்…….
“லிவிங் டு கெதர்” என்றால் திருமணமாகாத ஆணும் பெண்ணும் மனதளவிலும், உடலளவிலும் வாழ்க்கை நடத்துவது. சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த கலாச்சாரம் எப்போதோ கால் தடம் பதித்து விட்டது.


சமீபத்தில் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தவர்கள், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர எந்த சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது. முற்போக்கானதொரு மாற்றம் பொது சமூகத்தால் ஏற்கப்பட்டு நிலைபெற வேண்டுமானால், அது பற்றிய விவாதங்களும் பரவலாக எழ வேண்டும்.அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் லிவிங் டூ கெதர்.
லிவிங் டு கெதர் என்றால், புரிதல் வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வசித்து பார்க்கும் ஒரு மனோபாவம்..


எல்லாவிதத்திலும் ஒத்துவந்தால் சேர்ந்து வாழ்வது, இல்லாவிட்டால் பிரிந்துவிடுவது.. இது அச்சு அசலான மேற்கத்திய நாகரீகம். உடல்ரீதியான புரிதல், மனரீதியான புரிதல் என ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக சேர்ந்து வாழ்ந்து பார்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.. இதைநோக்கிதான் இன்றைய பெரும்பாலான இளைய சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை நாளடைவில் அதிகமாகி கொண்டே போகிறது.. இதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன..
திருமணங்கள்
யார் தலையீடும் இல்லாமல் தனியாக வாழ்க்கை நடத்த இளம் ஆணும், பெண்ணும் பலர் நினைக்கிறார்கள்.. இதற்கு அவர்களுக்கு உறுதுணையாக கை நிறைய சம்பளமும் காரணம்.
கோவையில் லிவிங் டு கெதர் உறவில் வாழ்ந்து வந்த கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ். காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயந்தி. இவர்கள் இருவரும் லிவிங் டுகெதர் முறையில், கோவை அவிநாசி சாலை அருகே உள்ள ஓர் அபார்ட்மென்டில் தங்கிவந்ததாகக் கூறப்படுகிறது.


சமீபகாலமாக, அவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்திருக்கிறது. ராகேஷ்மீது ஜெயந்தி கடும் கோபத்தில் இருந்திருக்கிறார்.
இந்நிலையில், தன் ஹேண்ட் பேக்கில் மறைத்துவைத்திருந்த ஆசிட்டை எடுத்து ராகேஷ் முகத்தின் மீது வீசியிருக்கிறார் ஜெயந்தி. மேலும், அதே வேகத்தில் ராகேஷைக் கத்தியாலும் குத்தியிருக்கிறார். இதில் ராகேஷ் நிலை தடுமாறி மயங்கியிருக்கிறார். இதையடுத்து, தூக்க மாத்திரை சாப்பிட்டு ஜெயந்தியும் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.


இருவரையும் மீட்டு போலீஸார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக ராகேஷ், ஜெயந்தி இரண்டு பேர் மீதும் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தற்காலிக தகாத உறவுகளின் நிலை இறுதியில் இதுதானோ?