டெல்லியில் மதுபானக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் சரக்கு கிடைக்காமல் மது பிரியர்கள் அவதியடைந்துள்ளனர்.
டெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் 475 மதுபான கடைகளின் உரிமம் நேற்றுடன் காலாவதி ஆனது. இதன்காரணமாக டெல்லியில் செயல்பட்டு வந்த 475 மதுபான கடைகளில் சுமார் 468 கடைகளை இன்று முதல் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மதுக்கடைகளின் உரிமம் காலாவதி ஆவதை தொடர்ந்து இக்கடைகளில் ஏற்கனவே மதுபான கொள்முதல் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபானங்களுக்கு கடந்த சில நாட்களாக கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் இன்று முதல் இக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் தலைநகர் டெல்லியில் மதுபானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
சரக்கு தட்டுப்பாட்டால் மது பிரியர்கள் கடும் அவதி
