புதினா சுருள்சப்பாத்தி:
தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப், நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்,புதினா – சிறிய கட்டு, எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு.
செய்முறை:
புதினாவை சுத்தம் செய்து, அலசி, நீரில்லாமல் வடித்துக்கொள்ளுங்கள். பிறகு அதைபொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து நன்குபிசைந்துகொள்ளுங்கள். சிறிதளவு மாவை எடுத்து, கயிறு போல நீளமாகத் திரித்து, வட்டமாகசுருட்டிக் கொள்ளுங்கள். சுருட்டியதை புதினாவின் மேல் (இருபுறமும் புதினா ஒட்டும்படி) புரட்டியெடுங்கள். பிறகு, மாவு தொட்டு, சப்பாத்தியாக திரட்டி, நிதானமான தீயில் வேகவிடுங்கள். புதினா மணத்தோடு புத்துணர்ச்சி தரும் டிபன் இது.








