• Tue. Sep 10th, 2024

எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும்

Byகுமார்

Jul 2, 2022

எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும் என மதுரையில் எல்ஐசி ஊழியர் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்
மதுரை திருநகரில் தனியார் திருமண அரங்கத்தில் எல்ஐசி ஊழியர் சங்கத்தின் 66 ஆவது ஆண்டு பொது மாநாடு மற்றும் பேரணி நடைபெற்றது.இந்தப் பேரணி திருநகர் மூன்றாவது பஸ் நிறுத்தத்தில் ஆரம்பித்து மாநாடு நடைபெறும் அரங்கம் வரைக்கும் சென்றது ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசி பாதுகாக்க வேண்டி விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். அதனைத் தொடர்ந்து மாநாட்டு நுழைவு வாசலில் கொடியேற்றினர். இந்த மாநாட்டிற்கு கோட்டச் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலும் அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்க தலைவர் வேணுகோபால் தென்மண்டல கூட்டமைப்பின் தலைவர் சுவாமிநாதன் மதுரை மாநகராட்சிதுணை மேயர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கோட்டக் சங்கம் மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ரமேஷ் குமார் செய்தியாளர் சந்திப்பு கூறியதுமத்திய அரசு மக்களிடம் எந்த வித கருத்தும் கேட்காமல் பொதுத்துறை நிறுவனமான எல்ஐசிபங்குச்சந்தையில் பட்டியல் சேர்த்ததுதவறான ஒன்று.


எல்ஐசி பங்கு விற்பனையை திரும்ப பெற வேண்டும். பொதுத்துறை எல்ஐசி நாட்டிற்கும் மக்களுக்கும் உகந்தது மக்களுக்கு நலத்திட்டங்களை அள்ளி அள்ளித் தரும் எல்ஐசியின்நிதி ஆதாரத்தை தேச வளர்ச்சிக்கு தேசத்தின் சுயசார்பிற்கும் முழுமையாக பயன்படுத்துகிற வகையில் அரசின் பொருளாதாரக் கொள்கைகள் அமைய வேண்டும் . இந்திய மக்கள் எல்ஐசி மீது வைத்திருக்கிற நம்பிக்கையைத் தொடர்ந்து உறுதி செய்வதற்கான அனைத்து சேவைகளையும் இயக்கங்களையும் அர்ப்பணிப்புகளையும் எல்ஐசி ஊழியர் சங்கம் செய்யும் . பொதுத்துறை நிறுவனத்தை பாதுகாக்கும் பொருட்டு எல்ஐசி ஊழியர் சங்கம் போராடும் அதற்கு பொதுமக்களும் ஆதரவு தர வேண்டும் என கோரிக்கையாகவும் வைக்கிறோம். .தொடர்ந்து சார்பாளர்கள்மாநாட்டில் ஊழியர்கள் நலன்கள் பற்றி விவாதிப்பதோடு பாலிசிதார்கள் சேவை உரிமைகள் பற்றியும் பொதுத்துறை எல்ஐசி எல்ஐசி யின் மாண்புகளை தொடர்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும் விவாதித்து தீர்மானம் ஏற்றப்படும் என கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *