• Tue. Dec 10th, 2024

மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

ByA.Tamilselvan

May 4, 2022

எல்.ஐ.சியின் பங்குகளை விற்கும் மத்திய அரசை கண்டித்து எல்.ஐ.சி ஊழியர்கள் இரண்டு மணிநேரம் பணி புறக்கணிப்பு போராட்டம்.
இதுகுறித்து கோட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் கண்ணன் -கூறும் போது .தேசவளர்ச்சியின் முக்கியபங்கு வகிக்கும் எல்ஜசியின் யின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இன்று 3.5 சதம் பங்குகள் விற்பனை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, மத்திய அரசின் இம்முடிவு மிகவும் தவறானது. தேச நலனுக்கு எதிரானது என தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். அதையும் மீறி ஒன்றிய அரசு பங்கு வெளியீட்டை கொண்டு வந்துள்ளது. அதனைக் கண்டித்து மத்தியஅரசின் பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்தி மதுரை செல்லூர் எல்ஐசி கோட்ட அலுவலகத்தில் எல்ஐசி ஊழியர்கள் பிற்பகல் 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிரான கோஷங்களையும் எழுப்பினர்.