• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்

பாசிச சனாதன சக்திகளை கண்டித்து சென்னையில் வருகின்ற 28ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில அளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.

சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர துணை செயலாளர் காயத்ரி தலைமையில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளர் சரசுராம் ரவி முன்னிலையில் மாநகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாசிச சனாதன சக்திகளை கண்டித்து சென்னையில் வருகின்ற 28ஆம் தேதி நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரத்தில் இருந்து கலந்து கொள்வது தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.


மேலும் வருகின்ற மார்ச் 8 தேதி உலக மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடுவது எனவும் ஏப்ரல் 14 டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் சேலம் மாநகரில் உள்ள 60 கோட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடுவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க மாநில துணை செயலாளர் வீ.ந. சுந்தர் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது மாநில துணை செயலாளர்கள் ஜங்ஷன் சிவா முருகேசன் கிருஷ்ணமூர்த்தி கந்தசாமி மாயாவதி உள்ளிட்ட அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.