• Fri. Mar 29th, 2024

சேலத்தில் மாநில அளவிலான யோகாசனப் போட்டி

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்

தமிழ்நாடு யோகா விளையாட்டு வளர்ச்சி கழகம் மற்றும் சேலம் யோகா விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய 78வது மாநில அளவிலான யோகாசன போட்டி சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை, விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இருந்து 11 மாவட்டங்கள் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த யோகாசன போட்டியானது 10 வயதுக்கும் கீழ், 11 வயது முதல் 15 வயது வரை, 16 வயது முதல் 19 வயது வரை, 20 வயதிற்கு மேல் என 4 பிரிவுகளின் கீழ் போட்டியானது நடத்தப்பட்டது .


மேலும் இந்த போட்டியில் முக்கிய ஆசனங்களான சிரசாசனம், விருச்சிகசனம், ஏகபாத சிரசாசனம், தனுசாசனம், பூரணதனுசாசனம், கூர்மாசனம், ஹனுமனாசனம், காலபைரவாசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களில் மாணவ மாணவிகள கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். சேலம் யோகா சங்கத்தின் மாவட்ட தலைவர் கணபதி செயலாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்த இந்த போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஆத்தூர் ராமநாயக்கன்பாளையம் தமிழ் ஏஞ்சல் பள்ளி முதலிடத்தையும் மேட்டூர் சென்மேரிஸ் பள்ளி இரண்டாம் இடத்தையும் பேளுர் சக்தி விகாஸ் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன மேலும் இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகள் ஏப்ரல் மாதம் தேசிய அளவில் நடைபெறும் யோகாசன போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *