தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்கள் ரஜினி, விஜய். தற்போது விஜய் பீஸ்ட் படத்தில் நடித்துமுடித்துள்ளார்.இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.
இந்த இரண்டு படங்களையும் நெல்சன் திலீப் குமார் தான் இயக்குகிறார். இந்நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யுடன் பேசியது குறித்து நெல்சன் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியது “விஜய் சார் ரஜினி சாரோட ரசிகர்னு எல்லாருக்கும் தெரியும். பீஸ்ட் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த போது விஜய்சார் என்கிட்ட வந்து ரஜினி சார் அடுத்த படத்துக்கான கதைகள் கேட்க ஆரம்பிச்சிருக்கார். நீங்க ஏன் அவரிடம் கதை சொல்ல முயற்சி பண்ணக்கூடாது என்று கேட்டார்.
நீங்க இப்பவே கதை ரெடி பண்ணுங்க நெல்சா இந்தப் படம், முடிந்தவுடன் ரஜினி சார் படம் தொடங்கறதுக்கும் சரியா இருக்கும். உங்களுக்கு நடந்திடும் உறுதியா சொன்னார் … அதைபோல் நடந்துவிட்டது.” என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.