• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்..,

ByK Kaliraj

Aug 23, 2025

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தை தொடங்கியுள்ள
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வருகின்ற 01.09.2025 திங்கள் கிழமை விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு
சுற்றுப்பயணம் மேற்கொண்டு எழுச்சியுரையாற்றுகிறார்.

எடப்பாடியார் வருகை சம்பந்தமான ஆலோசனை கூட்டம் காரியாபட்டி திருச்சுழி ரோட்டில் உள்ள SVS திருமண மஹாலில்* மாவட்ட பொருப்பாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு. G.பாஸ்கரன்* கழக அமைப்புச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

முன்னாள்சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் ,முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணியன் முன்னாள் அருப்புக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கழக மகளிர் அணி இணை செயலாளர் மணிமேகலை மற்றும்

விருதுநகர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், ஒன்றியக்கழக செயலாளர்கள் நகரக் கழக செயலாளர்கள், பேரூர் கழக செயலாளர்கள், பிற அணி மாவட்டச் செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.