
அன்னை தமிழ் காப்போம் அனைத்து மொழியும் கற்போம் என்பதுதான் தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்திற்கு உரிய எண்ணிக்கை குறைக்கப்பட்டால் போராட்டம் நடத்துவோம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா திருக்கடையூரில் பேட்டி :-

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில், தேமுதிக மாநில துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதியின் சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் 60 வயதில் நடைபெறும் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திருக்கடையூர் வருகை புரிந்த தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், ஆலயத்தில் சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி ஆகியவற்றில் தரிசனம் மேற்கொண்டார்.
அவருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பிரசாதங்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருமணம் நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமதி பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறும் பொழுது, மும்மொழி கொள்கையை பொறுத்தவரை கேப்டன் கூறியது போல், அன்னை மொழியை காப்போம் அனைத்து மொழிகளும் கற்போம் என்பதுதான் தேமுதிகவின் குறிக்கோளாகும்.

தமிழ் மொழியை தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பு செய்யும்பொழுது தமிழகத்தின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் அதனை எதிர்த்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் போராட்டங்கள் நடைபெறும் என்று தெரிவித்தார் மேலும் பட்ஜெட் குறித்து விரிவாக அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார்.
