• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

வெறுப்புணர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்.., ஐ.நா.பொதுச்சபைத் தலைவர்..!

Byவிஷா

Nov 10, 2023

இந்த உலகத்தில் வெறுப்புணர்வுக்கு இடம் இல்லை என்றும், அனைவரும் வெறுப்புணர்வுக்கு எதிராக ஒன்றிணைவோம் என்றும் ஐ.நா.பொதுச்சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் “கடந்த மாதம் 7ஆம் தேதி முதல் உலகம் முழுவதிலும் வெறுப்பு உணர்வும் குற்றங்களும் அதிகரித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு தெளிவான செய்தியை கூற விரும்புகிறேன்.
வெறுப்புக்கு இந்த உலகில் இடம் இல்லை. வெறுப்பான குற்றங்கள் காயங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவநம்பிக்கையையும் வன்முறையையும் தூண்டுகின்றது. இதன் மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. அனைவரும் பிறப்பு அடிப்படையில் சமமான சுதந்திரம் மற்றும் உரிமை பெற்றவர்கள். ஆகவே வெறுப்புணர்வுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைவோம்” என தெரிவித்துள்ளார்.