• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

பாலமேடு ஜல்லிக்கட்டு காளைகளோடு மல்லுக்கட்டும் வீரர்கள்!

ByA.Tamilselvan

Jan 16, 2023

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமரிசையாக நேற்று நடந்து முடிந்த நிலையில் மாட்டுப் பொங்கல் நாளான இன்று காலை 8 மணியளவில் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
மதுரை அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு கார், தங்க நகை, மோட்டார் பைக், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டன.


இதனை தொடர்ந்து இன்று உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உறுதிமொழியுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 150 மாடுபிடி வீரர்களும் 700 காளைகளும் பங்கேற்க முன்பதிவு செய்து உள்ளனர். சிறந்த மாடு பிடி வீரர்கள் 2 பேருக்கு காரும், சிறந்த காளை உரிமையாளருக்கு பைக்கும், தங்க நாணயங்களும், ரொக்கத் தொகைகளும் இதர பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.