• Tue. Dec 10th, 2024

விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி..

Byகாயத்ரி

Dec 14, 2021

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் உயிரிழந்த வீரர்களுக்கு விழுப்புரத்தில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பத்தரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்புக்காக செயலாற்றி வரும் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன், பத்திரிகையாளர்கள், அச்சு ஊடகங்கள்(பத்திரிகை),ஆன்லைன்மீடியா உள்ளிட்டவைகளில் பணியாற்றும் ஆசிரியர், துணை ஆசிரியர், நிருபர்கள்,தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோர்களின் நலன்களிலும் அயராது செயலாற்றி வருகிறது.

அந்த வகையில் குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் உயிரிழந்த வீரர்களின் மரணத்திற்கு தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் விழுப்புரம் மாவட்ட அலுவலகத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆல் மீடியா ஜர்னலிஸ்ட் யூனியன் விழுப்புரம் மாவட்ட தலைவர் எம் உத்தர குமார் மாவட்ட செயலாளர் b.கண்ணன் பொருளாளர் A.ஜெயபிரகாஷ் மற்றும் பத்திரிகை நிருபர்கள் ஆன ஏழுமலை நிர்மல் சதாம் உசேன் ரியாஸ் அகமது தமிழ்செல்வன் பிரேம் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.