• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

லெமன்கிராஸும் அதன் மருத்துவ குணங்களும்!

லெமன்கிராஸ் என்பது என்ன? அது மருத்துவ குணம் வாய்ந்ததா? எப்படிப் பயன்படுத்துவது?`லெமன்கிராஸ் என்பது, சிட்ரஸ் (எலுமிச்சை) வாசனை கொண்டதால் அப்படி அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இது அதிகம் விளைகிறது. ஆனால் இது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

`தப்பட்’ என்ற இந்திப்படத்தில், நாயகி டாப்ஸி தினமும் லெமன்கிராஸை வெட்டிப்போட்டு டீ போடும் காட்சி படம் முழுவதும் வரும்.

லெமன்கிராஸ்
மலேரியாவை எதிர்க்கும் தன்மை கொண்டது, லெமன்கிராஸ். தூக்கமின்மை பிரச்னைக்கு தீர்வு தரும். வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்கள், அந்தச் சூழலின் ஸ்ட்ரெஸ்ஸை கட்டுப்படுத்த, வேபரைஸர் மெஷினில் லெமன்கிராஸ் எசென்ஷியல் ஆயில் பயன்படுத்தலாம். இது ஆன்டிபாக்டீரியல் தன்மை கொண்டது. ஜலதோஷம் வராமல் தடுக்கக்கூடியது. கர்ப்பகாலம் மற்றும் சாதாரண நாள்களில் ஏற்படும் வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்தும் தன்மை லெமன்கிராஸ் டீ மற்றும் அதன் வாசனைக்கு உண்டு.

லெமன்கிராஸை வீட்டில் வளர்க்கலாமா?
லெமன்கிராஸை சாதாரணமாக வீட்டிலேயே வளர்க்கலாம். அதன் இலையை தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 50 மில்லி அளவுக்கு குடித்தால் தொண்டைக் கரகரப்பும் வாந்தி உணர்வும் சரியாகும். இதன் இலைகளைச் சேர்த்து டீ தயாரித்துக் குடித்தால் வலி நிவாரணியாகவும் உதவும். கால்வீக்கமும் காய்ச்சலும் தணியும். ரத்த அழுத்தம் குறையும். ஃபைப்ரோமயால்ஜியா எனப்படும் பெண்களின் வலி பிரச்னைக்கும் உதவும். இந்தச் செடியை வீட்டுக்குள் வைத்து வளர்த்தால் அதன் வாசனை வீடு முழுவதும் பரவி, மன நிம்மதியை தரும் என்று கூறப்படுகிறது!