• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் துப்புரவு பணியாளர் -களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் துப்புரவு பணியாளர்களுக்கான சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தேனி மாவட்டம் ஜீவன் அறக்கட்டளையோடு மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்புக்குழு இணைந்து ஆண்டிபட்டி துப்புரவு பணியாளர்களுக்கான கூட்டம் சமுதாய கூட அரங்கில் நடைபெற்றது. 86 பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஜீவன் அறக்கட்டளை நிறுவனர் முருகேசன் அனைவரையும் வரவேற்றார்.ஆண்டிபட்டி பேரூராட்சி சேர்மன் . சந்திரகலா தலைமை பொறுப்பு ஏற்று தலைமை உரை நிகழ்த்தினார். முன்னாள் சேர்மன் இராமசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். கவுன்சிலர் பராசக்தி பெருமாள் முன்னிலை வகித்தார்.
துப்புரவு பணியாளர்களுக்கான சட்டமான மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் பற்றிய விளக்கத்தை நெறியாளர். வழக்கறிஞர். சகாய பிலோமின்ராஜ் கருத்துரை வழங்கினார். மேலும் இச்சட்டத்தின் மறுவாழ்வு திட்டத்தையும் பற்றி எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வை ஒருங்கிணைப்பாளர் ர். வ.முத்துக்குமார் தொகுத்து வழங்கினார். மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் .சசிக்குமார், வழக்கறிஞர். ஸ்டாலின் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள். இறுதியாக . உமாதேவி நன்றி கூறினார்.