

தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
தென்னிந்தியாவின் இரண்டாவது மிக உயரமான மலை சிகரம் என கூறப்படும் உதகையில் உள்ள தொட்டபெட்டா மலைச் சிகரத்தில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி சுற்றுலாப் பயணிகள் மற்றும் வியாபாரிகள் கண் முன்பு மலையின் மீதிருந்து ஆபத்தான பள்ளத்தாக்கிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சியை அங்குள்ள ஒரு சுற்றுலா பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட பெண் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
