
சேமநல முத்திரை தாள் கட்டணத்தை மூன்று மடங்காக உயர்த்தியதைக் கண்டித்து உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்த கோரியும், சேமநல முத்திரை தாள் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 120 ரூபாய்- ஆக மூன்று மடங்கு உயர்த்த கோரி தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் சேமநல முத்திரைத் தாள் கட்டணம் மூன்று மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்துள்ளனர்.
உசிலம்பட்டி சார்பு நீதிமன்றம், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்குகளில் வாதாடாமல் உள்ளதால் பல்வேறு வழக்குகளை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

