சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆண்டுதோறும் தேர்வு நடத்துவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு 2021 – 2022க்கனா தேர்தலில் சங்க நிர்வாகிகளை உறுப்பினர்கள் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்தனர்.
இதில் தலைவராக திரு N.நாகேஸ்வரன் அவர்களும் செயலாளராக திரு.K.சித்திரைசாமி அவர்களும் பொருளாளராக திரு. சகோ. செல்வராஜன் அவர்களும் இணைசெயலாளராக திரு. I.மணிகண்டன் அவர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனால் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் ஒற்றுமையுடனும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் ஆரோக்கியமான விஷயமாக இருப்பதாக மூத்த வழக்கறிஞர் தெரிவித்தனர்.