• Sat. Apr 20th, 2024

பெட்ரோல் டீசல் மீதான கடந்தாண்டு இலாபம்… இம்புட்டா?

Byமதி

Dec 15, 2021

பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் உற்பத்தி வரியால் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருமானம் கடந்த ஆறு ஆண்டுகளில் 300 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மீதான வரி வசூல் மூலமாக மத்திய அரசுக்கு கடந்த 2014-15 நிதியாண்டில் ரூ.74,158 கோடி வருவாய் கிடைத்தது. இந்த நிலையில், 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் மட்டும் இந்த வகையிலான வரி வசூல் ரூ.2.95 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியினால் மத்திய அரசுக்கு ‘3719080000000’ வருவாய் கிடைத்துள்ளதாம். அதாவது, 3 லட்சத்து 71ஆயிரத்து 908 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாம். இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பார்க்கப்போனால் ஒட்டுமொத்த அரசாங்கமும் பெட்ரோல் டீசல் மீதான வரியில் கிடைக்கும் பணத்தில் இருந்து மட்டுமே செயல்படுகிறது போல. இருப்பினும் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க அரசு கதறுகிறது. கடைசியில் கஷ்டப்படுவது என்னவோ நடுத்தர மக்கள் மட்டுமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *