• Thu. Apr 25th, 2024

மாணவ, மாணவியருக்கு உதவித்தொகையை உயர்த்திய தமிழக அரசு

Byகாயத்ரி

Dec 15, 2021

மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சிறப்பு படி உதவித்தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்பு படியை, மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அரசாணையில், 2021 – 2022-ம் கல்வி ஆண்டு முதல் மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப்படியினை மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்குவதற்காக ரூ.8,79,00,000 நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 2011-12-ம் கல்வியாண்டு முதல் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற இயலாத கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் சிறப்பு படி உதவித்தொகையை விடுதியில் தங்காமல் கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 100 முதல் ரூ 175 வரையும், விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 175 முதல் 350 ரூபாய் வரையும் உயர்த்தி வழங்கப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக 4.63 கோடி ரூபாய் செலவாகும் எனவும், இதன்மூலம் 26,024 மாணவ, மாணவியர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *