• Sat. Apr 20th, 2024

உத்தரகாண்டில் நிலச்சரிவு – 3,000 பேர் பாதிப்பு

ByA.Tamilselvan

Jan 7, 2023

உத்தரகாண்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலசரிவு காரணமாக வீடுகள் மண்ணில் புதைந்ததால் ஆயிரக்காணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திடீர் நிலச்சரிவு காரணமாக 500க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்துவிட்டதால் அங்கு வசித்து வரும் மக்கள் பீதியில் உள்ளனர்.தகவலறிந்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, ஜோஷிமத் நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
பலர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 60 குடும்பங்கள் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அப்பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர். 29 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தங்களது பாதுகாப்பற்ற வீடுகளில் தொடர்ந்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலச்சரிவால் 3 ஆயிரத்திறகும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடுகள் பாதிக்கப்பட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் 4,000 ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *