• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் மண்சரிவு மற்றும் மரங்கள் சரிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் 13 வது கொண்டை ஊசி வளை சாலையில் மண் குவியல் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததை நேரிடையாக பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்,

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வந்த காரணத்தினாலும் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கன ரக வாகனங்கள் அதிக அளவு இந்த சாலையில் சென்று வருவதால் அதிலிருந்து ஏற்பட்ட அதிர்வுகளால் இந்த மண் சரிவு மற்றும் மரங்கள் சரிவு ஏற்பட்டுள்ளது.
நல் வாய்ப்பாக சாலை அகலமாக இருந்ததால் மண்சரிவு மற்றும் மரங்கள் சரிந்து விழும் போது வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.