• Sun. Mar 16th, 2025

மக்னா காட்டு யானையின் தொடரும் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை, பாடந்துறை பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் பிஎம்-2மக்னா காட்டு யானை மேலும் இரண்டு வீடுகளை இடித்து சேதப்படுத்தி உள்ளது…அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாத நிலையில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது…


நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பாடந்துறை, சுண்டவயல் பகுதியில் சுப்பிரமணி மற்றும் பிரபாகரன் ஆகியோரின் இருவர் வீடுகளை சேதப்படுத்திய அரிசி ராஜா என்ற காட்டு யானையை பிடிப்பதற்கு வனத்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில் பணியை தீவிரப்படுத்தாமல் சுணக்கம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இருப்பினும் வனத்துறையினர் பிஎம்-2 அரிசி ராஜா யானை இருக்கும் இடத்தை ட்ரோன் கேமரா மூலம் கண்டறிந்து அப்பகுதிக்கு கும்கி யானைகளை கொண்டு செல்வது வழக்கமாக உள்ளது. தொடர்ந்து இரண்டு பேரை பலி வாங்கிய அரிசி ராஜா யானை தொடர்ந்து வீடுகளையும் விவசாய நிலங்களையும் சேதப்படுத்தி வருவதால் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே இதனை கருத்தில் கொண்டு இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த அரிசி ராஜா யானையை பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு சென்று யானையை பராமரிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.