கடந்த அக்டோபர் 3ஆம் தேதி லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனே கார்கே, ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், பிரியங்கா காந்தி ஆகியோர் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர். லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், நேர்மையாக விசாரணை நடைபெற ஏதுவாக மத்திய இணைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் எனவும் மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுப்பதாக குடியரசுத் தலைவர் உறுதி அளித்ததாக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சந்திப்புக்கு பின்னர் தெரிவித்தனர்.