• Sat. Apr 20th, 2024

ஆண்டிப்பட்டியில் 150 ஆண்டுகள் பழமையான அம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம்..!

ஆண்டிபட்டியில் 150ஆண்டுகள் பழமையான அம்மன் கோவில் திருவிழா கொண்டாட்டம். பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம், முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தில் 150ஆண்டுகள் பழமையான அமச்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் திருவிழா கொண்டாட முடியவில்லை. ஆனால் இந்த வருடம், புரட்டாசி மாத கோவில் திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் அம்மச்சியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர்.


பின்னர் 100க்கும் மேற்ப்டோர் தீச்சட்டி, பால்குடம்,முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திகடன்களை அம்மனுக்கு செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊர்வலமாக, வீதிவீதியாக சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதனை அடுத்து மேளதாளங்கள் மற்றும் கரகோஷங்களுடன் அம்மச்சி அம்மனின் முழு உருவசிலையையும், முளைப்பாரிகளையும் வைகை ஆற்றில் கரைத்தனர்.


கொரோனா காரணமாக இரண்டு வருடங்களுக்கு பின்னர் கோவில் திருவிழா நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *