
தேனி மாவட்டம் கம்பம் கோம்பைரோடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக சரவணன் கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், இன்று மதியம் சரவணன் தனது அம்மாவின் வீட்டுக்கு சென்று அம்மாவிடம் பேசிவிட்டு, வீட்டுக்கு பின்னால் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சரவணன் திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது தாயார் வீட்டுக்கு பின்னால்
சென்று பார்த்துள்ளார்.
அங்கு சரவணன் புளியம்மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக்கண்ட அவரது தயார் அலறல் சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள் ஓடிவந்து, ஆம்புலன்ஸ் வரவழைத்து சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து போனது தெரிய வந்தது. இதை அடுத்து அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
