• Thu. Apr 18th, 2024

பழனி தண்டாயுதபாணி கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி தகவல் வெளியீடு

ByA.Tamilselvan

Jan 22, 2023

ஜனவரி 27-ம் தேதி பழனி தண்டாயுதபாணி கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகுமகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
ஆன்லைன் மூலம் முதலில் முன்பதிவு செய்யும் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜனவரி 18-ம் தேதி துவங்கி, ஜனவரி 20-ம் தேதி வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கும்பாபிஷேக விழாவில் எந்த நாளில் என்னென்ன வைபவம் நடைபெறும், ஜனவரி 27-ம் தேதி எந்த நேரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என்பது தொடர்பான விபரங்கள் வெளியாகி உள்ளது.
ஜனவரி 21-ம் தேதி ஆநிரை வழிபாடு, ஏழு பரி வழிபாடு சண்முக நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்படுதல், 16 திருக்குடங்களில் திருமகளை எழுந்தருளச் செய்து, 16 வகை பொருட்கள், 16 மகளிர் வழிபாடு நடத்தப்பட உள்ளன. ஜனவரி 21-ல் ஆறுவகை பொருட்கள் கொண்டு வேள்வி வழிபாடு, ஜனவரி 22-ம் தேதி அரசமர வழிபாடு, நிலமகள் வழிபாடு, பூமி வழிபாடு ஆகியன நடத்தப்பட உள்ளன. ஜனவரி 23-ம் தேதியன்று பரிவார உப தெய்வங்களில் திருக்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்பட உள்ளது. ஜனவரி 24-ல் புனிநீர் வழிபாடு, புனித நூல் வழிபாடு ஆகியன நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து பலவித பூஜைகள், யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, ஜனவரி 27-ம் தேதி காலை 8.15 மணிக்கு தண்டாயுதபாணி சுவாமி விமானத்திற்கும், 8.45 மணிக்கு திருச்சுற்று தெய்வங்களின் விமானங்களின் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *