• Tue. Apr 14th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

ரமலான் நோன்பு துறக்கும் நிகழ்ச்சியில் கே.டி.ஆர் பேச்சு …

ByK Kaliraj

Feb 23, 2026

விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துலாஷா தைக்கா தர்ஹா (சின்ன பள்ளிவாசல்) வளாகத்தில் சிவகாசி மாநகர அதிமுக சிறுபான்மை பிரிவு நடத்திய அனைத்து சுன்னத்துல் ஜமாத்தார்கள் கலந்து கொண்ட சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு ஜமாத் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு ராஜேந்திரபாலஜிக்கு ஜமாத்தார்கள் குர்ஆனை பரிசாக வழங்கினர். இந்த இஃப்தார் கலந்து கொண்டு ராஜேந்திரபாலாஜி நோன்பு கஞ்சி அருந்தினார்.

பின்னர் இஸ்லாமியர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி,

எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் இடத்தில் சமூக நல்லிணக்கம் இருக்கும்,சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு நிச்சயம் இருக்கும்.சிறுபான்மை மக்கள் மீது அன்பும் பாசமும் கொண்டவர் எடப்பாடி பழனிச்சாமி.

நாங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இருக்கின்ற இடம் உங்களுக்கான இடமாகத்தான் இருக்கும்.இஸ்லாமியரின் குரலாக இஸ்லாமியரை மதிக்கின்ற இடத்தில்தான் நாங்கள் இருப்போம்.

இஸ்லாமியர்களுக்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்த அரசு அதிமுக அரசு.

உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்றும் நான் இருப்பேன்.எனக்கும் உங்களுக்குமான உறவு தொப்புள் கொடி உறவு. ஒரு ஆழமான உறவு …

இஸ்லாமியர்களோடுதான் நான் இருக்கிறேன் நீங்கள் எதையும் பார்க்க வேண்டாம் என்னை மட்டும் பாருங்கள்.

இஸ்லாமியர்களின் பாதுகாவலனாக , தூணாக ,கேப்டனாக , கேடயமாக நான் இருப்பேன் என தெரிவித்தார்.