கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளினை முன்னிட்டு திருத்தங்கல்லில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளை 151 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருத்தங்கல் வ.உ.சி சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக, விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் மான்ராஜ், சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறப்பினர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மன், சிவகாசி மண்டல செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணகுமார், கருப்பசாமிபாண்டியன் ஷாம் (எ) ராஜஅபினேஸ்வரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கியம், வெங்கடேஷ், கருப்பசாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முத்துபாண்டியன், வெம்பக்கோட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் எதிர்கோட்டை மணிகண்டன், திருத்தங்கல் அம்மா பேரவை ரமணா, ராமராஜ்பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், தலைவர் எம்.கே.என்.செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
