• Thu. May 2nd, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது… பொதுமக்கள் கோரிக்கை

கடைய நல்லூரில்ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்யக்கூடாது பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி கிருஷ்ணாபுரம் மலம்பாட்டை ரோட்டில் அமைந்திருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்யக் கூடாது என 5 வது வார்டு கிருஷ்ணாபுரம், ரஹ்மானியாபுரம் பொதுமக்கள் அல். மஹ் ஹாஹ் அறக்கட்டளை சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் டாக்டர் செல்லத்துரையிடம் நகர திமுக செயலர் அப்பாஸ் மூலமாக மனு அளித்தனர்.
இது பற்றிய விபரமாவது. கடையநல்லூர் நகராட்சியில் அரசு மருத்துவமனை தவிர கர்ப்பிணி பெண்கள் வந்து தங்களை பற்றிய விபரங்கள் பதிவு செய்ய நீண்ட நாட்களாக வசதியாக நகராட்சி அலுவலகத்தில் மருத்துவ பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். திடீரென ஒரு நாள் இரவோடு இரவாக அந்த அறை காலி செய்யப்பட்டு பணியாளர்கள் நடுத்தெருவுக்கு வந்தனர். கணிணிகள் மேஜை நாற்காலி பீரோ , குளிர் சாதன பெட்டிகள் (தடுப்பூசிகள் வைத்திட ) ஆகியவை மாயமாகின. இது குறித்து நகர்மன்ற உறுப்பினர்களிடம் கர்ப்பிணி பெண்கள் சமூக ஆர்வலர்கள் புகார் கூறவே 40 ஆண்டுகளாக இயங்கிய பல்நோக்கு சுகாதார மருத்துவ பணியாளர்கள் அமர இடம் மட்டுமே கிடைத்தது. அந்த அறையில் தெருவிற்கு சென்று கணக்கெடுப்பு செய்ய வேண்டிய தூய்மை இந்தியா திட்டகளப் பணியாளர்கள் ஓய்வெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகில் மலம்பாட்டை தெருவில் அமைந்துள்ள நகர் நல ஆரம் ப சுகாதார நிலையத்தை அங்கிருந் து மாற்றி விட்டு அந்த இடத்தில் ரேசன் கடை அமைக்க நகர்மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரியவருகிறது. கடையநல்லூர் நகராட்சி குடிநீர் நீரேற்றும் (வாட்டர்டேங்க்) அருகில் நகராட்சி இடம் இருப்பதால் அங்கே ரேசன் கடை அமைத்திடவும் கர்ப்பிணி பெண்கள் பரி சோதனை இல்லம் தேடி மருத்துவம் மூலம் நீரழிவு ஆஸ்துமா ரத்தக் கொதிப்பு மாத்திரைகள் வாங்கிடவும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவும் கிருஷ்ணாபுரம் மேற்கு பகுதி குறிப்பாக 2 3.4.5 மற்றும் 6 ,11வது 12 வது வார்டு பொதுமக்கள் பயன் பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்றம் செய்யக் கூ டாது.
அப்பகுதி மக்களும் அறக்கட்டளை நிர்வாகிகளும் இணைந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் டாக்டர் செல்லத்துரையிடம் நகர திமுக செயலாளர் அப்பாஸ் மூலம் மனு அளித்தனர் மாவட்ட செயலாளரும் நகராட்சி நிர்வாகத்திடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்பதாக கூறியுள்ளார் .ஏற்கனவே நவீன பேருந்து நிலையம் கட்டுவதற்கு அண்ணாமலை நாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தை குத்தகை அடிப்படையில் பெற நகர்மன்ற தலைவரால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் கூட்டத்தில் ஆல் பாஸ் எனச் சொல்லி சமூக ஆர்வலர்களின் முயற்சியால் அந்த தீர்மானம் கைவிடப்படுவதாக நகர்மன்ற தலைவரின் அறிக்கை மூலம் பொதுமக்களுக்கு தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *