• Thu. Jun 25th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கொடூரா- கொன்னா பாவம் தின்னா தீரும்..,

Byஜெ.துரை

Jun 24, 2026

மனிதனை மனிதனாக பார்க்கவேண்டும், அம்மனிதனை நேசிக்க வேண்டுமே தவிர எவரையும் மனிதத் தன்மையற்றவர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக் கருத்தைக் கொண்டு உருவாகி வரும் படம் கொடூரா.

யாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சார்லஸ் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் வா வரலாம் வா, ஃபயர் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க நிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.

வில்லனாக இலியாஸ் நடிக்க வாழை ஜானகி அம்மாள்,பேபி தீக்ஷிதா சந்தோஷ் குமார், தாய்க்கிழவி புகழ் முத்துக்குமார், பிக்பாஸ் அரோரா, டி.எம் கார்த்திக், திருக்குறளி மற்றும்டாக்டர்.திவாகர் ஆகியோர் நடிக்கின்றனர்

ஒளிப்பதிவு – விஜய் வெங்கட்

இசை- சௌகத் அலி, பாடல்கள் – வ.கருப்பன்

ஸ்டண்ட்- ஸ்பீடு மோகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு -தஷிகிரண்தயாரிப்பு நிர்வாகம் – வம்சி கிருஷ்ணாமக்கள் தொடர்பு- வெங்கட்

தயாரிப்பு -யாஸ் எண்டர்டைன்மென்ட்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் -ஆர்.சார்லஸ் ஆனந்த் B.A,LLB

இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்கால், தரங்கம்பாடி போன்ற இடங்களில் இடைவிடாது நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் மூன்று பாடல்கள் மற்றும் இரண்டு சண்டைக்காட்சிகளும் இடம் பெறுகிறது.