• Mon. Mar 24th, 2025

கடத்தப்பட்ட கல்லூரி மாணவி நேற்று நள்ளிரவு தனிப்படை குழுவினரால் மீட்பு

ByAnandakumar

Mar 11, 2025

கரூரில் பட்டப்பகலில் ஆம்னி வேனில் கடத்தப்பட்ட கல்லூரி மாணவி நேற்று நள்ளிரவு தனிப்படை குழுவினரால் மீட்பு – மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நந்தகோபால் மற்றும்அவரது தாய் பாட்டி உள்ளிட்ட 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கரூர் அரசு கலைக் கல்லூரியில் படித்து வரும் ஈசநத்தம் பகுதியில் சேர்ந்த மாணவி நேற்று பிற்பகல் 12:30 மணியளவில் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது ஆம்னி வேனில் கடத்தப்பட்டார்.

கடத்தப்பட்ட மாணவியை மூன்று தனிப்படை குழுவினர் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று நள்ளிரவு திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் மாணவி மீட்கப்பட்டு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த நந்தகோபால் உள்ளிட்ட மூன்று இளைஞர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட வழக்கில் ஒரு தலைப்பட்சமாக காதலித்த நந்தகோபால், தாய் கலா, பாட்டி பொன்னம்மாள், சரவணன், பழனிசாமி உள்ளிட்ட 5 பேர் கைது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டு தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்