• Thu. Apr 18th, 2024

கிரீஸ் நாட்டில் கேஜிஎப்2-வின் சாதனை!

கன்னட நடிகர் யாஷ் நடிபில், 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் பல நாடுகளில் கேஜிஎப் 2 திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இதுவரை தென்னிந்திய படங்கள் எதுவும் ரிலீஸாகாத கிரீஸ் நாட்டில் முதன் முதலாக கேஜிஎப் 2 ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *