தெலுங்கு நடிகர் பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய ‘பாகுபலி’ திரைப்படம் மூலம் பிரபலமானவர்! அவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான ராதே ஷ்யாம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது பிரபாஸுக்கு விரைவில் முழங்கால் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் அதற்காக அவர் அமெரிக்கா கிளம்பியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
சுஜீத் இயக்கிய சாஹோ படத்தின் படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சிகளின் போது நடிகர் பிரபாஸ்க்கு காலில் காயம் ஏற்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், சரியான நேரம் அமையாததால் பிரபாஸ் அதைத் தள்ளிப்போட்டார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படங்கள் பல நிலுவையில் இருந்ததால் சிகிச்சையை தள்ளிப்போட்ட நிலையில், தற்போது அறுவை சிகிச்சை மேற்கொள்ள பிரபாஸ் முடிவு செய்துள்ளார்.