2018-ல் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் என்ற கன்னட திரைப்படம் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியிடப்பட்டது. தற்போது கேஜிஎஃப் திரைப்படத்தின் 2-வது பாகம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகியுள்ளது.
இந்தத் திரைப்படம் வெளியான முதல் நாளில் 134.5 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் ஹிந்தி பதிப்பு வெளியான முதல் நாளில் 53.95 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும், இந்தியாவில் கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்தி பதிப்பில் நேற்று வரை 220 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இது பாகுபலியின் ஹிந்தி பாதிப்பு வசூலைவிட அதிகம். இதனை அடுத்து, கேஜிஎப் 2 திரைப்படம் வெளியான முதல் நான்கு நாட்களில் உலகளவில் 640 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.