• Tue. Jun 17th, 2025
[smartslider3 slider="7"]

நெல்சன்தான் இயக்குனர் – உறுதிசெய்த ரஜினி!

பீஸ்ட் படத்தின் ரிலீஸூக்குப் பிறகு இயக்குனர் நெல்சன் மீது மோசமான விமர்சனங்கள் எழுந்தன. இதனால் அவர் அடுத்து இயக்கவுள்ள ரஜினி படத்தில் மாற்றங்கள் செய்ய சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இதுபற்றி ரஜினியிடம் பேசியுள்ளதாகவும் இயக்குனரை மாற்றலாமா என அவரிடமே கேட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இப்போது நெல்சன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தன் சுயவிவரக் குறிப்பில் தான் இயக்கிய படங்களின் வரிசையில் தலைவர் 169 படத்தையும் இணைத்துள்ளார். அதேபோல், அடுத்து ரஜினிகாந்த் உடனடியாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ‘ரஜினிகாந்த் 169’ படத்தின் புகைப்படத்தை இணைத்துள்ளார். இதன் மூலம் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது நெல்சன்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.