பேரழகன்!!
அவளும் அவனும்
நீண்ட நேர விழி சந்திப்பில் மூழ்கி திளைத்திடும் நேரம்…
கைகள் இரண்டும் கோர்த்துக்கொண்டு.
விழி நோக்கும் இடைவெளியில்
விரல்கள் பின்னிக்கொள்ள…. இதழ்கள் பின்ன துடித்தது….
மன்னவனின் மாய விழிகள் கண்டு சொக்கி நின்ற மான்விழியாளோ
அவனை அள்ளி அணைத்து மார்பில் சாய்ந்து நாணம் பூண்டாள்….
அவள் நாணத்தில் பிறந்திட்ட காதலை
ஏந்தியவனாய் அவன்….
அவன் அவள் பேரழகன்

கவிஞர் மேகலைமணியன்