• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பேரழகா..,

எனது விரல்களோடு
சேர்ந்த உனது
விரல்களின் மெல்லிய
அழுத்தமும் இங்கே

எனது இதழ்கள் சொல்ல மறந்த
நேசமதன் ஓராயிரம்
உணர்வுகளையும் ஒட்டு
மொத்தமாய் சொல்லிடும்

உனது மௌனத்தில்
இல்லை மறுப்பு எதுவுமே
இதயத்தின் ஆழத்தில்
இல்லை வெறுப்பேதுமே

நீண்டிடும் நேச வாழ்க்கைக்கு
நாளும் இது தானே
பொறுப்பாகுமே
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்