• Wed. Mar 26th, 2025

பேரழகா..,

முழுமதியோ
தேய்பிறை யோ
எதுவானாலும்
நீ
என்
நியாபகங்களை விட்டகழாத
பூர்ண சந்திரன் நீதானடா

இடைவெளியுமல்ல
இடை வேளையுமல்ல
என்னிடம்
இருக்கும்
நீ

எப்படி
தேய்பிறை ஆவாய்
எப்போதும்
நீ என் முழுமதிதான்

உனது மௌனம் கூட
ஒரு பேரழகே
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்