பேரழகனே..,
என் பேரன்பே
நீ என் இதயத்தை மீட்டிடும் இன்னிசை ராகமே
ஸ்பரிசமான பேரழகனே
என் விழிகள்
தேடுவது
உன்னையன்றி வேறில்லை
நேசத்திலே
விஞ்சிய
அற்புதமே
உனது கரம்
பற்றும் கனா காலங்கள்
என் இதயத்தில் காந்தர்வ ரூபங்கள்
சங்கமிக்கும்
போது தெரியும்
அன்பின் ஆழம் எனும்
நேசத்தின் நீருற்று
எவ்வளவு அழகான
அற்புதமான
நேச உறவு இது
என்பதை
அகண்ட
இப்பூமி
முழுமையாக
வேண்டாமடா
ஒரே
படுக்கை
அளவு
நிலம்
போதுமடா
உன் மீது பித்தாகி
காதல் யுத்தமிட
என் பேரழகா

கவிஞர் மேகலைமணியன்













; ?>)
; ?>)
; ?>)